அதிகாலையிலேயே அதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 13 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 
மீனவர்கள் இலங்கை

அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் செய்தியாக தமிழக மீனவர்கள் 13 பேரைக் கைது செய்து இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கைது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று காலை மீன்பிடிப்பதற்காக ஆழ் கடல் பகுதிக்குச் சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை மீனவர்கள்

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்து வருவதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web