அதிகாலையிலேயே அதிர்ச்சி... சற்றுமுன் இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

 
வேலு பிரபாகரன்

இன்று அதிகாலை 5.30 மணிக்கு பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார். 

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வேலு பிரபாகரன்

ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், நேற்று மதியம் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய வேலு பிரபாகரன், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்.

வேலு பிரபாகரன்

1989-ல் 'நாளைய மனிதன்' படத்தில் இயக்குநராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன்' என பல படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு வயது 68.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?