அதிகாலையில் அதிர்ச்சி... கார்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக கார் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, சாமான்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு ராமநாதபுரம் - மதுரை பிரதான சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் 28, ராமநாதபுரம் ஜமுனா 55, ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்த 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரமக்குடி தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
