திருவள்ளூரில் அதிர்ச்சி... கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி!

 
தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திருத்தணியை அடுத்துள்ள சித்தப்பனுார் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா (39) என்பவர், தனது இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கூறி, மனு அளிக்க வந்தார்.

சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீசார், அவரை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

பின் அவரிடம் விசாரித்த போது, அவரது இடத்தை சிலர் போலியாக ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயல்வதாகவும், அதை தடுத்த தங்கள் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

பத்திரபதிவு பட்டா பத்திரம் ஸ்டாம்பேப்பர்

இதையடுத்து திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் திடீரென இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?