அதிர்ச்சி.. இன்ஸ்டா ரீலுக்காக கடத்தல்.. போலீசிடம் சிக்கிய 3 ஆசாமிகள்!

 
அஜித், தீபக், அபிஷேக்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள் அஜித், தீபக், அபிஷேக். தங்களின் சமூக ஊடகப் பின்தொடர்வை அதிகரிக்கவும், லைக்குகளைப் பெறவும் ஆசைப்பட்ட அவர்கள், போலி கடத்தலை மையமாக வைத்து ஒரு ரீலைப் படமாக்க முடிவு செய்தனர். இதற்காக நொய்டாவில் பரபரப்பான சாலையில் மற்றொரு வாலிபரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளார் இளைஞர் ஒருவர். இதை அருகில் இருந்த மற்றொரு நபர் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

இன்ஸ்டா

ஆனால், இதை அப்பகுதி மக்கள் அறியாமல், உண்மையில் யாரையோ கடத்துகிறார்கள் என நினைத்து, மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, பல்வேறு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ வைரலாக பரவி நொய்டா மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையினரின் கவனத்தை ஈர்த்த நொய்டா செக்டார் 20 போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில், மேற்கண்ட சம்பவத்தை இளைஞர்கள் ரீல்களுக்காகச் செய்தது தெரிய வந்ததையடுத்து, அஜித், தீபக், அபிஷேக் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். காவல்துறை துணை ஆணையர் (ஏடிசிபி) மணீஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "மூவரின் செயல் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி அமைதியையும் குலைத்துள்ளது" என்றார்.

போலீஸ்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு மூன்று இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web