அதிர்ச்சி.. நாக்கை வெட்டி கடவுளுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய நபருக்கு நேர்ந்த சோகம்!

 
நாக்கு

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டம், அஞ்சோரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தானாட் கிராமத்தில்  உள்ள குளத்துக்கு ராஜேஷ்வர் நிஷாத் (33) என்பவர் இன்று காலை சென்றார். பிறகு, சில மந்திரங்களைச் சொல்லி, கத்தியால் நாக்கை அறுத்து, ஒரு ஏரிக் கரையில் உள்ள ஒரு கல்லில் வைத்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள கோவிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்வரைக் கண்ட கிராம மக்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ராஜேஷ்வர் நிஷாத்தின் மனைவி பேச முடியாத நிலையில் உள்ளார். அவரும் தன் நாக்கை அறுத்து சிவபெருமானிடம் காணிக்கையாகக் கொடுத்து தனது சில விருப்பங்களை நிறைவேற்றினார்.

ஆனால், "இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ராஜேஷ்வர் நிஷாத் நாக்கை வெட்ட பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். மூடநம்பிக்கை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web