அதிர்ச்சி... தனது பைக் மீது தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த இளைஞர்!

 
பைக்  எரிப்பு

 ஆவடி பருத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் 65 வயது மாசிலா. இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் 33 வயது முகேஷ். இவர் பணிக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர் மதுபோதைக்கு அடிமையானதால் அடிக்கடி இதற்காக வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

பைக்  எரிப்பு

வழக்கம் போல் நேற்றும்  இருசக்கர வாகனத்துக்கு மாத தவணை கட்டுவதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் தராததால், மனம் உடைந்த முகேஷ் தனது 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கை பருத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டார்.  உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

பைக்  எரிப்பு

அதற்குள் பைக் முற்றிலும் எரிந்து சாம்பலானது.  இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு முகேஷை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். டியூ கட்ட பணம் தராததால் பைக்கை கொளுத்தியதை ஒத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web