அதிர்ச்சி... மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் பெண் மேயர் சுட்டுக்கொலை!

 
அதிர்ச்சி... மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் பெண் மேயர் சுட்டுக்கொலை!

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டதை அந்நாடு கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே அந்நாட்டு நகரமொன்றின் பெண் மேயரை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கொன்றுள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவில், பெண் ஒருவர் முதல் முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே மெக்சிகோவின் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி... மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் பெண் மேயர் சுட்டுக்கொலை!

லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வாகி இருந்ததாக அந்நாட்டு மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ நாட்டின் அதிபாராக தேர்வான அடுத்த சில மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ் ஜன நடமாட்டம் அதிகம் நிறைந்திருந்த நடுரோட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. 

கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ்  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.  3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web