அதிர்ச்சி... மகள் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை!

 
ராதிகா

நாகப்பட்டினம் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராதிகா, மகள் திவ்யா. திவ்யா 12 ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் மகள் இறந்த சோகத்திலயே தாய் ராதிகா இருந்ததாக கூறப்படுகிறது. 

காவல்

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராதிகா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கார்த்திகேயன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, படுகாயமடைந்த ராதிகாவை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் ராதிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே 6 நாட்களுக்கு முன்பாக மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதனைத் தொடர்ந்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!