அதிர்ச்சி.. மாமியாரை அரிவாளால் வெட்டி படுகொலை.. மனைவி படுகாயம்.. மருமகன் வெறிச்செயல்!

 
சித்ரா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (45). இவரது மகள் நிவேதா (25). இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிவேதா, ஜெயபாலுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிவேதா காளிகாநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சித்ரா வீட்டில் வசித்து வந்தார்.

இதனால் கலிக்கநாயக்கன்பட்டிக்கு அடிக்கடி வரும் ஜெயபால், மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மனைவி நிவேதா பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் போலீசார் ஜெயபாலை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஜெயபால் தனது மாமியார் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், மாமியார் சித்ராவை வெட்டிக் கொன்றார்.

தடுக்க வந்த மனைவியின் கையை வெட்டிவிட்டு ஜெயபால் தப்பினார். பலத்த காயமடைந்த நிவேதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயபாலை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web