அதிர்ச்சி.. வீடு புகுந்து ரவுடி வெட்டி படுகொலை.. மனைவி கண் முன்னே நடந்த பயங்கரம்!

 
பிரியா

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 27), மனைவி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் கவுதமன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கவுதமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவுதமின் மனைவி, உடனடியாக  காவல் துறைக்கு தகவல் கொடுக்க, சைதாப்பேட்டை காவல் துறையினர் கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவுதம் தேனாம்பேட்டை காவல் நிலைய  சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கவுதமின் மனைவி பிரியாவின் முதல் கணவர் ராஜ்கிரணுக்கும், கவுதமுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் காவல் துறை சந்தேகிக்கிறது. கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மனைவி, குழந்தை கண்முன்னே நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web