பக்ரீத் திருநாளில் அதிர்ச்சி... ரயில்கள் மோதி கோர விபத்து... 4 பேர் பலி.. பலர் படுகாயம்!
எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று பக்ரீத் திருநாளில் காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக கோர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்கத்தா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், டார்ஜிலிங்கில் சரக்கு ரயில் மீது மோதியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை கொல்கத்தா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியது.மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்து இன்று ஜூன் 17ம் தேதி திங்கள்கிழமை சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. மீட்புப் பணிகளுக்காக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்த நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
#WATCH | Goods train rams into Kanchenjunga Express train in Darjeeling district in West Bengal, several feared injured
— ANI (@ANI) June 17, 2024
Details awaited. pic.twitter.com/8rPyHxccN0
கொல்கத்தாவில் உள்ள சீல்டா ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயில் சிலிகுரியின் ரங்கபானி பகுதியில் பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.இன்று காலை 9 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பயணிகள் காயமடைந்துள்ளனர். அகர்தலாவில் இருந்து வரும் 13174 கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி நிலையத்திற்கு அருகே ரங்கபாணி அருகே சரக்கு ரயிலுடன் மோதியதாக NFR அதிகாரி தெரிவித்தார்.கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் நியூ ஜல்பைகுரி நிலையத்திலிருந்து சீல்டாவிற்கு பயணத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வங்காள முதல்வர் அதிர்ச்சி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிதேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விவரங்கள் காத்திருக்கும் நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக டிஎம், எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
