வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி... தங்கம் விலை மீண்டும் ஏற்றம்!

 
தங்கம் தங்கம்

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் திடீர் உயர்வு பதிவு செய்யப்பட்டதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தாழ்வுடன் வந்த தங்க விலை, கடந்த சனிக்கிழமை சற்று உயர்வை சந்தித்த நிலையில், இன்று காலை மேலும் கூர்மையான ஏற்றத்தை கண்டது.

தங்கம்

சந்தை வட்டாரங்களின் தகவல்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,410 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்பட்டிருந்ததால் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை நேரத்திலேயே கிராமுக்கு ரூ.110 உயர்வு ஏற்பட்டது. இதனால் சவரவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.167 என விற்பனையாகிறது.

தங்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களில் தொடர்ந்து உயர்வும் சரிவும் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்ட உயர்வு, பண்டிகை காலத்தையும், வரவிருக்கும் திருமண சீசனையும் கருத்தில் கொண்டு விலை மேலும் கூட வாய்ப்பு இருக்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தை நிலவரம், உலக பொருளாதார மாற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்கை மாற்றங்கள் உள்ளிட்டவை தங்க விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!