மலைப்பாதையில் அதிர்ச்சி.. அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பயணிகள்!

 
யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்திற்கு 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு டவுன் பஸ் எண்.36 புறப்பட்டது. அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது, நடுரோட்டில் காட்டு யானை ஒன்று அமைதியாக நின்று கொண்டிருந்தது. திடுக்கிட்ட டிரைவர் தீபகுமார், திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

ஆனால் யானை அங்கிருந்து நகராமல் தொடர்ந்து சுற்றித்திரிந்தது. யானை நடுரோட்டில் நிற்பதை கண்டு பயணிகள் திகைத்தனர். அப்போது திடீரென யானை ஆக்ரோஷத்துடன் பஸ்சை நோக்கி பாய்ந்தது. இதனால், பயணிகள் பீதியில் உறைந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர், யானையிடம் இருந்து பயணிகளை காப்பாற்ற பேருந்தை பின்னோக்கி ஓட்டினார். அவர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி சுமார் அரை கி.மீ தூரம் பயங்கரமான மலைப்பாதையில் ஓட்டினார். யானை தொடர்ந்து பேருந்தை துரத்தியதால், பயணிகள் அலறினர்.

ஒரு கட்டத்தில் சாமி ஏரி குறுக்கிடப்பட்டது. ஏரியில் தண்ணீரைப் பார்த்ததும் யானையின் கவனம் திரும்பியது. அப்போது, பேருந்தை துரத்திச் சென்று களைத்துப் போன , தாகம் தீர்க்க ஏரியை நோக்கி ஓடினார். இதனால் பஸ்சில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து டிரைவர் கியரை மாற்றிவிட்டு மின்னல் வேகத்தில் பேருந்தை பெட்டமுகிலாலம் மலைக்கிராமம் நோக்கி ஓட்டினார்.   யானை துரத்துவதை பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web