அதிர்ச்சி... திருவிழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களில் ஒருவர் உயிரிழப்பு; 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

 

உள்ளூர் திருவிழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 40 பேர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலக் குறைவா? அல்லது தண்ணீர் சுகாதரமாக இல்லாதது காரணமா என்று விசாரணை நடைப்பெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பேடு பகுதியில் உள்ள கேல் செண்டாத்தூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் திருவிழாவை முன்னிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்டவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு தினங்களாக பிரியாணி சாப்பிட்டவர்களில் சுமார் 40 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கேல் செண்டாத்தூர் கிராமத்தில், ஊர் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டி பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியாணி சாப்பிட்டு, சிலர் தண்ணீரை குடிக்காமல் இருந்ததால் அவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரியாணி உணவில் எதுவும் கலக்கப்பட்டதா அல்லது தண்ணீர் மாசுபட்டது தான் காரணமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீர் மற்றும் மலம் மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

குடிநீர் குழாய் அருகிலே பாதாள சாக்கடையும் உள்ளது. இதன் காரணமாக பாதாள சாக்கடைப் பைப் லைன் பழுதடைந்து குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள்

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web