அதிர்ச்சி... தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டத்தில் வீட்டில் இருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டையை பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞானசவுந்தரி. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளையும் தாய், தந்தையினர் வளர்த்து வந்த நிலையில் இன்று காலை தந்தை சிவசங்கரன் இளைய குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தார். அப்போது மூத்த குழந்தை குனஸ்ரீ வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடி கொண்டு இருந்த நிலையில், அருகில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது.

சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை காணவில்லை என்று தேடிய போது குழந்தை தண்ணீர் வாளியில் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்ற நிலையில், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் தாய், தந்தை, உறவினர்கள் கதறி அழுதனர். தண்ணீர் வாளியில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
