அதிர்ச்சி.. திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்.. திடீரென மயங்கி விழுந்து இளம்பெண் மர்ம மரணம்!

 
சரவாணி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பகலகுண்டேவில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்கு சரவாணி (22) என்ற இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் சரவாணி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவாணியை சந்திக்க அவரது தாய் மகள் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார். அப்போது  திருமணம் செய்துக்கொள்ளுமறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

தற்கொலை

இதையடுத்து, நேற்று காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற இவர், திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web