அதிர்ச்சி... குடிநீரில் நச்சு கலந்து வாந்தி வயிற்றுப் போக்கு... 6 பேர் பலி.!

 
 குடிநீரில் நச்சு கலந்து வாந்தி வயிற்றுப் போக்கு


 
புதுச்சேரியில் குடிநீரில் நச்சு கலந்ததால் ஆறு பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  செப்டம்பர் 10ம் தேதி முதல், உருளையன்பேட்டை கோவிந்தசாலை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் வசித்து வரும்  மக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, திமுக மற்றும் அதிமுக கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் தனித்தனியே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.  

 குடிநீரில் நச்சு கலந்து வாந்தி வயிற்றுப் போக்கு

போராட்டத்தின் போது, திமுக மற்றும் அதிமுகவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "3 பேர் உயிரிழந்துள்ளனர். 

 குடிநீரில் நச்சு கலந்து வாந்தி வயிற்றுப் போக்கு

ஆனால் முதல்வரோ,  அமைச்சர்களோ பாதிக்கப்பட்டவர்களை இதுவரை சந்தித்து ஆறுதல் கூறவோ நிவாரணம் வழங்கவோ நேரில் வரவில்லை.  நாங்கள் இங்கு கூடி நல்ல குடிநீர் வழங்கக் கோரிப் போராடுகிறோம்.இது குறித்து அரசு தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக  விசாரணை நடத்தப்பட்டு வருவதாக யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிகமாக குடிநீர் பாட்டில்களை வழங்கி வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?