அதிர்ச்சி.. நன்பணை கொன்ற ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை!

 
 கலைப்புலி ராஜா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை வ.உ.சி நகரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரும் ஆதிக்குடியை சேர்ந்த கலைப்புலி ராஜா என்ற ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்  (03.07.2024) இரவு நவீன், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுக்கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும், ராஜாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

அடித்தே கொலை

இதில், பலத்த காயமடைந்த நவீன்குமாரை, அப்பகுதி மக்கள் மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் நண்பர்கள் ஆங்கரை சேர்ந்த ஸ்ரீநாத், பாலா ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜா திருச்சி அருகே உள்ள சிறுகனூர் காப்புக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று ராஜாவை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை ராஜா திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் தற்காப்புக்காக அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த ராஜா உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டு பிடிக்கப்பட்ட கலைப்புலி ராஜா மீதும் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web