அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை மர்ம மரணம்... ஆண் நண்பரை கைது செய்த போலீசார்!

பிரபல வங்கதேச திரைப்பட நடிகை ஹுமைரா ஹிமு (37) மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் கழுத்தில் காயங்கள் காணப்பட்டதால், இதை மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஹுமைரா ஹிமு கொலைச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகை ஹுமைரா ஹிமு, அவரது நண்பரால் டாக்காவில் உள்ள உத்தாரா அதுநிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹுமைரா ஹிமு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
আমি মারা গেলে আমাকে নিয়ে ব্যাবসা শুরু হয়ে যাবে - মৃত্যুর ৫ বছর আগে বলেছিলেন হুমাইরা হিমু 😭 😭#HumairaHimu #humayrahimu pic.twitter.com/1S5gIt1lRw
— 𝗠𝗗 𝗭𝗶𝘆𝗮𝘂𝗹 𝗛𝗼𝗾𝘂𝗲 (@MDziyaul1990A) November 3, 2023
ஆனால் அவர் கழுத்தில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதே போல், ஹுமைரா ஹிமுவை மருத்துவமனையில் சேர்க்க வந்த ஆண் நண்பர் ஒருவர், மருத்துவர்கள் ஹுமைராவைப் பரிசோதித்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்து புறப்பட்டதாக தெரிகிறது.
இதனால் காவல்துறையினர் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஹுமைரா ஹிமு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், இறந்த அன்று அவர் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
எனவே மருத்துவமனையில் சேர்த்த நபர் மற்றும் ஹுமைரா ஹிமுவின் ஆண் நண்பர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை ஹுமைரா ஹிமுவுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது அத்தையை தொடர்பு கொள்ள காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆண் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்க தேசத்தில் பிரபல நடிகை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!