அதிர்ச்சி... வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு!

இன்று நவம்பர் 1ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், முதல் மாற்றமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று அதிகாலை முதலே அமலுக்கு வந்தது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியும், 15ம் தேதியும் என மாதத்தில் இரண்டு நாட்கள் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மாதத்தின் தொடக்க நாளில், அதிர்ச்சியளிக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.1,898 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.101 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டுக்கான 19 கிகி எடையுள்ள சமையல் சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் தேவைக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை அவற்றை தயாரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தேவைக்கேற்ப மாறுதல்களை அறிவித்து வருகின்றன. இதன்படி இன்று நவம்பர் 1ம் தேதி முதல் வணிக சிலிண்டரின் விலை ஒரேயடியாக ரூ.101 உயர்வு கண்டுள்ளது உணவக உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரில் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதிலும் சாமானியர்களுக்கான சிறிய உணவகங்களை இந்த விலை உயர்வு பாதிக்கும் என்பதால், அவை அந்த உணவகங்களின் உணவு தயாரிப்பு விலையில் எதிரொலிக்க வாய்ப்பாகும். சுற்றி வளைத்து அவை சாமானியர்களின் செலவினத்தையே பதம் பார்க்கும்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!