அதிர்ச்சி… ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு!

உலகம் முழுவதுமே கொரோனா காலத்திற்கு பிறகான வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உருவாகி வருகிறது. பல பெரும் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில், அதள பாதாளத்திற்குள் விழுந்துள்ளது. ஐடி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுமே பெரும் வீழ்ச்சி கண்டது. மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம், உலகம் முழுவதும் அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகரித்து வருகிறது. கூகுள் நிறுவனம் உட்பட இன்போசிஸ் போன்ற பெரும் ஐடி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. பெரும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி, குறைந்த சம்பளத்தில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இணைந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 42,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் கீழ் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்கள் தயாரிப்பு, பயணிகள் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்கள் தயாரிப்பு மற்றும் படகுகளுக்கான தயாரிப்பு ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக எர்ஜின் பில்ஜிக் என்பவர் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இந்நிறுவனம் சந்தையில் பின்னடைவை சந்திப்பதை தடுக்க பெரிய மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளதாக அவர் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக தங்கள் நிறுவனத்தில் இருந்து 2,500 பணியாளர்களை நீக்கம் செய்ய உள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். உற்பத்தி சாரா தொழிலாளர்களே நீக்கப்பட உள்ளனர். இதனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!