அதிர்ச்சி.. ரூ. 60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்.. சிக்கிய திமுக நிர்வாகியின் மகன்!

 
 ராம் அழகு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் தனிப்படை போலீசார் சேத்தூர் பகுதியில் ரோந்து சென்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சேத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் சாவடி தெருவை சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தப்பன் மகன் ராம் அழகு(40) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் தந்தத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து, புலனாய்வுப் பிரிவு போலீஸார், சிவகாசி பொறுப்பாளர் வனச்சரகர் பூவேந்தனிடம்,   ராம் அழகையும், கைப்பற்றப்பட்ட தந்தங்களையும் ஒப்படைத்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் ராம அழகிடம் நடத்திய விசாரணையில், கணபதி சுந்தரநாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (35) என்பவரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் செல்லையாவையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரிடம் கார் டிரைவராக செல்லையா பணியாற்றி வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், யானை தந்தங்கள் விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web