அதிர்ச்சி... ரூ.4.84 கோடி... விமான நிலையத்தில் தங்கம் கடத்திய ஊழியர்கள்!
மும்பை விமான நிலையத்தில், தங்க கடத்தலில் ஈடுபட்டதாக விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது விமான நிலைய ஊழியர்களிடமும் சோதனை நடைபெற்றது.
அப்போது, விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேர் தங்கத்தை கடத்தி வர முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.4.84 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!