அதிர்ச்சி... துப்பாக்கி குண்டு பாய்ந்து பள்ளி மாணவன் படுகாயம்!

 
துப்பாக்கி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர்  கிராமத்தில் வசித்து வருபவர்  முருகன். இவரது மகன் குரலரசன். சிறுவன் குரலரசன்   6ம் வகுப்பு படித்து வருகிறான்.  குரலரசன் இன்று அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றிருந்தான். அப்போது, அப்பகுதியில் சுற்றி திரியும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை சுடுவதற்கு வெங்கடேசன் என்பவர் திருப்பரணை கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சரத்குமாரை அழைத்துவந்திருந்தார். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

அவரை வைத்து கொக்கு சுட பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு தெருநாயை சுட்டுள்ளனர். அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு தவறுதலாக அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் குரலரசன் தலையில் பாய்ந்தது. இதில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான்.    சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இச்சம்பவம் குறித்து   போலீசார் வழக்குப்பதிவு செய்து  வெங்கடேசன் மற்றும் சரத்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், உரிய அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது