அதிர்ச்சி... ராமேஸ்வரம் கோயில் வாசலில் கட்டண குளியலறையில் ரகசிய கேமிரா... உரிமையாளர் வெறித்தனம்!

 
லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

அக்னித்தீர்த்த கடலில் குளித்து விட்டு அதன் பின்னர் ராமநாத  சுவாமியை தரிசிக்க கோயிலுக்கு செல்வது இராமேஸ்வரத்தில் பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பாவங்களைத் தொலைப்பது என பல இடங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்லும் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் தனியார் குளியல்  மற்றும் உடை மாற்றும் அறைகள் நிறைய இருக்கின்றன.

இந்நிலையில் அப்படியானதொரு அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரம் தெரிய வந்த நிலையில், தனியார் உ டை மாற்றும் அறையின் உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.குளியலறையில் கேமிரா வைக்கப்பட்டிருந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ரகசிய

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில்  நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரையில் இருந்த  லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அப்போது அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அருகிலிருந்த ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ராமேஸ்வரம்

உடனடியாக புகாரையடுத்து போலீசார் அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்த அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்ததில் அங்கு ரகசிய காமிரா பொருத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரகசிய கேமிராவை அகற்றி லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராமேஸ்வரம் தம்பியான் கொல்லையைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ராஜேஷ் கண்ணன் (34) என்பவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியிலும், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web