அதிர்ச்சி.. சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 7பேர் அதிரடியாக கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு நபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதை வாங்கி சிலர் தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்களை அவ்வப்போது போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், பழனி துணை கண்காணிப்பாளர் தனஜெயனுக்கு பழனி பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் வாங்கி சிலர் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

இதையடுத்து, தேரடி வீதியை சேர்ந்த பாஸ்கரன் (45 வயது), மதனாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (58 வயது) , குயவர் தெருவை சேர்ந்த நாகராஜ் (55 வயது), குரும்பபட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (66 வயது), பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (55 வயது), பூங்கா ரோடு ஈஸ்வரன் (57 வயது), சக்திவேல் (48 வயது) ஆகிய 7 நபர்களிடமிருந்து ஐம்பதாயிரம் லாட்டரி சீட்டுகள் மற்றும் 7000 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
