அதிர்ச்சி.. தலையணையால் அழுத்தி 6வயது சிறுமி படுகொலை.. சித்தி வெறிச்செயல்!

 
முஸ்கானா

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அஜாஸ் கான் (38). அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை முஸ்கானா (6) அஜாஸ் கானுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அஜாஸ்கான் அனிஷா (26) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், அனிஷா மீண்டும் கர்ப்பமானார்.

இந்நிலையில், நேற்று காலை அஜாஸ்கான் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து, அஜாஸ் கானை அழைத்த அனிஷா, முஸ்கானா வீட்டில் மயங்கிக் கிடப்பதாகக் கூறினார். உடனடியாக முஸ்கானாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் விரைந்தனர். இதில் சிறுமி மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அஜாஸ்கான் மற்றும் அனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தூங்கிக்கொண்டிருந்த முஸ்கானாவை அனிஷா தலையணையால் அழுத்தி மூச்சுத்திணறி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சித்தி அனிஷாவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அஜாஸ் கானுக்கு தொடர்பு உள்ளதா, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!