அதிர்ச்சி.. வழுக்கு மரம் ஏறும் போட்டி.. கீழே வேடிக்கை பார்த்த இளைஞர் பரிதாப பலி!

 
சுப்ரமணியம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பளியம்பட்டி கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மரம் ஏறுதல் போட்டி நடந்தது. இதற்காக 79 அடி உயரமுள்ள கழுகு மரத்தை வீழ்த்தி அதன் பட்டை அகற்றப்பட்டது. பின்னர் எண்ணெய், சோற்றுக்கற்றாழை தடவி முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் கழுகுமரம் நடப்பட்டது.

இந்த  மரத்தில் ஏறிய பல இளைஞர்கள், பெரியவர்கள் பாதிக்கு மேல் ஏற முடியாமல் வழுக்கி விழுந்தனர். பலர் கீழே நின்று மரத்தின் மீது  ஏறுபவர்களுக்கு உதவினார்கள். அப்போது பொட்டகனாவாய்பட்டியை சேர்ந்த பிச்சை அம்பலம் மகன் சுப்ரமணியம் (30) நின்று கொண்டிருந்தார். ஏறுபவர்களுக்கு உதவி செய்யும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 6 வயது மகளும், 2 வயது மகனும் உள்ளனர். கோவில் திருவிழாவின் போது மாரடைப்பால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web