அதிர்ச்சி... ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

 
ஸ்லோவாக்கியா பிரதமர்

உலகம் முழுவதும் வன்முறை செயல்கள் சமீபமாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் ராபர்ட் ஃபிகோ, அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அவர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.


ராபர்ட் ஃபிகோ மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் ஒரு குண்டு அவரைத் தாக்கியிருக்கலாம் எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், பாதுகாவலர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு விரைந்துள்ளனர்.  தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

ஸ்லோவேக்கியா

பிராட்டிஸ்லாவாவிலிருந்து வடகிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web