அதிர்ச்சி... எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்!
கேரள மாநிலம் அடிமாலியைச் சேர்ந்தவர் கிருபா எல்தோஸ் (21). சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி கிருபாவுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டிருந்த கிருபா நேற்றிரவு 8.30 மணியளவில் தனது தோழியின் வீட்டில் திடீரென சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக மாணவி கிருபாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
மாணவி கிருபாவின் இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இன்று டிசம்பர் 19ம் தேதி காலை கேரளாவில் உள்ள அவரது மாணவியின் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் அடிமாலி புனித ஜார்ஜ் ஜேக்கப் சிரியன் பேராலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!