அதிர்ச்சி.. பலமாக அடித்த சூரைக்காற்று.. பறந்து சென்ற வீட்டின் மேற்கூரை தாக்கி 4 பேர் படுகாயம்!

 
தகர மேற்கூரை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் கனமழை பெய்தது. அப்போது ஆர்.கே.நகர் வைத்தியநாதன் தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டின் தகர மேற்கூரை சூறைக்காற்றில் பறந்து அவ்வழியாக சென்ற ஆட்டோ மீது விழுந்தது.

மழை

இதில் ஆட்டோவின் மேற்கூரை கிழிந்து ஆட்டோ ஓட்டி வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் சுப்ரமணி படுகாயம் அடைந்தார். இதில் ஆட்டோவில் பயணம் செய்த கோகிலவாணி, செல்வி ஆகிய இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மேற்கூரை இடிந்து விழுந்ததில், அப்பகுதியில் உள்ள உணவகம் அருகே நின்று கொண்டிருந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா என்ற ஸ்விக்கி ஊழியர் பலத்த காயம் அடைந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகர மேற்கூரை ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடி வீட்டின் மேற்கூரையை வீட்டின் உரிமையாளர் சரியாகப் போடாததால் காற்றின் வேகத்தில் மேற்கூரை பறந்து சென்றதில் அவ்வழியாகச் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரை போலீஸ்  நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் 

From around the web