ஷாக்.. பள்ளியில் மோதிக்கொண்ட மாணவர்கள்.. தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு!

 
சிவக்குமார்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக இரு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இன்று மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி சண்டையை தடுக்க சென்ற ஆசிரியர் சிவகுமாரிடம், 'எங்களை தடுக்க நீங்கள் யார்?' என்று கூறி மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதவிர இந்த கும்பல் சண்டையில் மாணவர் ஒருவரின் கையிலும் வெட்டு விழுந்தது. ஆசிரியர் சிவக்குமாருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, கும்பல் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் வாலிபர்கள் என்பதால், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழு மோதலை தடுக்க சென்ற ஆசிரியரின் தலையை மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!