அதிர்ச்சி.. திடீரென உருவான பனிச்சரிவு.. 2 ஸ்கை டிரைவருக்கு நேர்ந்த சோகம்!

 
யூட்டா மலை

 யூட்டா மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ஸ்கை டைவர்ஸ் உயிரிழந்துள்ளனர். வியாழன் அதிகாலை அமெரிக்காவின் யூட்டாவின் வசாட்ச் மலைத்தொடரில் பனிச்சரிவில் சிக்கி இரண்டு சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர் என உள்ளூர் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டது. விபத்தில் சிக்கிய மற்றொரு பனிச்சறுக்கு வீரர் அதிர்ஷ்டவசமாக பனியில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சால்ட் லேக் கவுண்டி ஷெரிப் ரோஸி ரிவேரா கூறுகையில், கடுமையான பனிப்புயலுக்கு சில நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்த இந்த விபத்தில் 23 மற்றும் 32 வயதுடைய இருவர் உயிரிழந்தனர் . இறந்த சறுக்கு வீரர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிகப்பட்டுள்ளதாக ஷெரிப் துறை உறுதிப்படுத்தியது.

இது இந்த குளிர்காலத்தில் அமெரிக்காவில் பனிச்சரிவு இறப்புகளின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆகக் கொண்டு வருகிறது. சராசரி ஆண்டு பனிச்சரிவு இறப்பு எண்ணிக்கை 30 ஆகும், இது ஒப்பீட்டளவில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web