அதிர்ச்சி... திடீர் போராட்டம்... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது! பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதில் சிரமம்!

 
தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் வரையில் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில்,  இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னையில் பணி நிமித்தமாக வந்து தங்கி இருப்பவர்கள் மிக அதிகம். தொடர்  விடுமுறை  கிடைத்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள்.  அவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் விடுமுறை நாட்களில் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

koyambedu bus stand ஆம்னி பஸ்

இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வழக்கமான பேருந்துகளுடன் 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் சுமார் ஐந்து லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்னொரு பக்கம்  தனியாரின் ஆம்னி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டன.

அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படி கூடுதல் கட்டணம் வசூலித்த  ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக சோதனையிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்த  119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.  அதோடு இல்லாமல் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும்  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆம்னி

இந்த கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்கப்படாத காரணத்தால் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தொடர் விடுமுறை முடிந்து பலரும் இன்று முதல் சென்னைக்கு திரும்ப உள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆம்னி பேருந்துகள் தற்போது ஸ்டிரைக் அறிவித்துள்ளன.  இதனால் மக்கள் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web