அதிர்ச்சி... தமிழ்மொழி பாடப்பிரிவு நிறுத்தம்... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

 
அண்ணா பல்கலை கழகம்

மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கு ஆர்வம் காட்டாததால், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகளை பொறியியல் படிப்புக்கான தமிழ் மொழி பாடப் பிரிவுகளை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ் உட்பட எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளைப் பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, கடந்த 2021ம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அனுமதி அளித்தது. 

தமிழகத்தில் ஒரு சில அரசு கல்லூரிகளில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது  இந்நிலையில் கூடுதலாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் இந்த படிப்புகளில் கிராமப்புறங்களில் இருந்து சேர்கிற மாணவர்கள், ஆரம்பத்தில் அதிகளவில் ஆர்வம் காட்டி சேர்ந்தனர். அதன் பின்னர், படிப்பு முடித்த பிறகான வேலை வாய்ப்பில், ஆங்கிலமே பிரதான மொழியாக உள்ளதால், வெற்றிகரமாக பொறியியல் படிப்பை முடித்தாலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. 

அண்ணா பல்கலைக் கழகம்

தமிழில் பாடப்பிரிவை அறிமுகப்படுத்துகிறோம் என்று வெற்றிகரமாக சொல்லி வந்த தமிழக அரசும், இந்த பாடப்பிரிவை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தவோ, உற்சாகப்படுத்தவோ, அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவோ கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழ் மொழி வழியே பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவது குறைந்து வந்த நிலையில், ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டது. அப்போதும் ஆட்சியாளர்கள் இது குறித்து கண்டு கொள்ளாததாலும், கல்வித்துறை அமைச்சரும் இது  குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளாததாலும் மாணவர்கள் இந்த திட்டங்களில் சேர்வது முழுவதுமாகவே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. அதன் படி அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளது. 

பொறியியல் கல்லூரி

மேலும் 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளையும் மூடுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பாடப்பரிவில் தமிழ் மொழியில் படிக்க மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web