அதிர்ச்சி... இலங்கையில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!
தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் உட்பட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க படகுகளில் செல்கின்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதாக அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது. அதன்படி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த படகுகளில் தமிழக மீனவர்களின் 33 படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. அந்த படகுகளை உடைத்து அகற்றவும் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மயிலிட்டி துறைமுக பகுதிக்கு இந்த வாரத்தில் இலங்கை அதிபர் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது வருகையையொட்டி மயிலிட்டி துறைமுக பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. இதையடுத்து அங்கு அரசுடைமையாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 30-க்கும் மேற்பட்ட படகுகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. படகுகளின் மரக்கட்டைகள் அனைத்தும் டிராக்டர்களில் ஏற்றி அச்சுவேலியில் உள்ள மரபேட்டை தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
