அதிர்ச்சி.. டேங்கர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. சாலையில் கொட்டிய 4000 லிட்டர் பெட்ரோல், 8000 லிட்டர் டீசல்!

 
 வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க்

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்க்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. திருச்சியில் இருந்து 4000 லிட்டர் பெட்ரோல், 8000 லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாரணவாசி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரியில் இருந்த 4000 லிட்டர் பெட்ரோல், 8000 லிட்டர் டீசல் சாலையோர பள்ளத்தில் கொட்டியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெப்பமான காலநிலையால் பெட்ரோல், டீசல் எளிதில் தீப்பிடித்து எரியும் என தெரியவந்தது. இதனால், லாரி மற்றும் பெட்ரோல், டீசல் கொட்டிய இடத்தில் தீயணைப்பு துறையினர் ரசாயன நுரை கலந்து தண்ணீரை தெளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web