அதிர்ச்சி... தென்காசியில் பரபரப்பு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

 
தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே உள்ள  கம்பிளி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (70). இவரது மனைவி சுடலைமாடத்தி (65). இவர்கள், ஊருக்கு அருகே உள்ள தங்களது தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர்.

இவர்களது மகன் முருகேசன் (50). இவர், தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கம்பிளியில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முருகேசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை!!

இந்நிலையில், நேற்று முருகேசன் தனது மருமகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் திருநெல்வேலிக்கு சென்று கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும், குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் படியும் கூறியுள்ளார். 

அதன் பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மகன் சிவா, தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அழைப்பை முருகேசன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவா, தனது தாத்தாவின் தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். 

தற்கொலை

அங்கு மாட்டு தொழுவத்தில் பரமசிவன், சுடலைமாடத்தி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டுக்குள் முருகேசன் சடலமாக கிடந்துள்ளார். அருகில் விஷ மருந்து கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web