அதிர்ச்சி... மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மீன்!

ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் வசித்து வரும் மீனவர், ஒருவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புடிமடக்கா என்றப் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் சொடப்பள்ளி எரய்யா என்ற மீனவர், ஆந்திர வடக்கு கடல் எல்லை 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
புதன்கிழமை காலை, எரய்யா, மேலும் 3 மீனவர்களுடன் படகில் மீன்பிடித்துக கொண்டிருந்தார். அப்போது வலையில் சிக்கிய மீனை படகுக்குள் இழுத்தபோது, வலையில் இருந்த கொம்மு கோணம் அல்லது கருங்கொப்பரான் என அறியப்படும் நீண்ட வாய்ப் பகுதியைக் கொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை ஆக்ரோஷமாகத் தாக்கி கடலில் இழுத்துத் தள்ளியது. படகில் இருந்த மற்ற மூவரும் உதவி கோரியதைத் தொடர்ந்து விரைந்து வந்த மற்ற மீனவர்கள், கடல் முழுவதும் தேடியும், எரய்யா எங்கும் கிடைக்கவில்லை.
காணாமல் போன எரய்யாவைத் தேடும் பணியை கடலோரக் காவல்படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்று 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் மீனவரை மீன் தாக்கிக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!