ஷாக்.. மக்களை விரட்டி விரட்டி கடித்த குரங்கு.. 2 பேர் படுகாயம்!

 
வெள்ளமந்தி குரங்கு

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, காட்டுப்பன்றி, அரியவகை குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் வெள்ளமந்தி குரங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி பாபநாசம் மலையடிவாரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.
மேலும், சில நேரங்களில் குரங்குகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் பாபநாசம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த கொத்தனாராக பணிபுரியும் ஆரோக்கியராஜ் மகன் சுதாகர் (27) என்பவர் அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது சுவரில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று திடீரென சுதாகரை தாக்கியது. மேலும், அருகில் உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்த தங்கம் (62) என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது பின்னால் நின்ற குரங்கு ஒன்று தங்கத்தை தாக்கியது. இருவரும் தற்போது அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அவரை குரங்கு தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாபநாசம் அருகே கொத்தவிளை பகுதியில் மாணவியை குரங்கு தாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், வனத்துறையினர் ஊருக்குள் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web