அதிர்ச்சி.. காட்டு காளான் சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்.. 3 குழந்தைகள் பரிதாப பலி!

 
காளான்

மேகாலயாவில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சஃபாய் என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் காட்டு காளான் சாப்பிட்டதாக துணை ஆணையர் பி.எஸ்.சோலியா தெரிவித்தார்.

காட்டு காளான் சாப்பிட்ட 12 பேரில், மூன்று குழந்தைகள் சிறிது நேர்ந்த்திலேயே இறந்தனர். மற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார். எட்டு, பன்னிரெண்டு மற்றும் பதினைந்து வயது குழந்தைகள் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலை

காளான் சாப்பிட்டதால் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பது குறித்து மேகாலயாவில் இருந்து செய்திகள் வருவது இது முதல் முறை அல்ல. 2021 ஆம் ஆண்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காட்டு காளான்களை சாப்பிட்டதால் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web