ஷாக்.. வேணுமென்றே எய்ட்ஸை பரப்பிய இளைஞர்.. 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!

 
அலெக்சாண்டர் லூயி

பலருடன் உடலுறவு வைத்து எச்ஐவி எய்ட்ஸ் நோயை வேண்டுமென்றே பரப்ப முயன்றதற்காக அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான அலெக்சாண்டர் லூயி மீதான விசாரணை ஆகஸ்ட் 2023 இல் தொடங்கியது. அடா மாவட்ட துப்பறியும் நபர் ஒருவர் அலெக்சாண்டர் லூயியிடம் 15 வயது சிறுவனைப் போல் பேசினார். அப்போது லூயி தொடர்ந்து எய்ட்ஸ் நோயைப் பரப்ப முயற்சித்து வருகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடன் பேசிய பையனை  நேரில் சந்திக்க லூயி வந்தார் . அப்போது அடா மாவட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், எச்.ஐ.வி-பாசிட்டிவ் உள்ள லூயி மருந்து எடுத்துக் கொள்ளவில்லை, மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. வைரஸை பரப்புவதற்காக அவர் வேண்டுமென்றே ஆண்கள் மற்றும் டீனேஜ் சிறுவர்களுடன் உடலுறவு கொண்டார் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பை சொல்லாமல் மறைத்துள்ளார். 16 வயதிலிருந்தே 30 முதல் 50 வெவ்வேறு ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவரே போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடா கவுண்டி வழக்கறிஞர் ஜான் பென்னட்ஸ் வெள்ளிக்கிழமை ஒரு விசாரணையில் லூயியின் தொடர்ச்சியான மற்றும் மோசமான குற்றங்கள் சமூகத்தில் பலரை எதிர்மறையாக பாதித்துள்ளன என்று கூறினார். வழக்கை விசாரித்த அடா கவுண்டி ஷெரிப்பின் துப்பறியும் மற்றும் நன்னடத்தை குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார். விசாரணைக்குப் பிறகு, அடா கவுண்டி மாவட்ட நீதிபதி டெரிக் ஓ நீல் அலெக்சாண்டர் லூயிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web