அதிர்ச்சி.. வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர்.. கையும் களவுமாக மடக்கி பிடித்த போலீசார்!

 
ஈரோடு கள்ளச்சாராயம்

ஈரோடு அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் கள்ளச்சாரயங்களை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அறிவித்து, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது. கள்ளச்சாரயம்  தயாரிப்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளச்சாராயம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம்  விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சம்பள்ளியில் கள்ளச்சாராயம்  விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்படி ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று காலை அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது, ​​வீட்டுக்குள் மதுபானம் காய்ச்சி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்கு எஸ்டேட்டை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவர் கள்ளச்சாரயம்  காய்ச்சுவதாக கூறப்படுகிறது. அவல் பூந்துறை பழனிகவுண்டன் வலசை சேர்ந்த குமார் (34), பூந்துறை சேமூர் லிங்க கவுண்டன் வலசு அம்பேத்கர் நகரை சேர்ந்த கார்த்தி (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், 8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பீப்பாய்கள் மற்றும் அடுப்புகளை பறிமுதல் செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web