ஷாக்.. கை விரல் அறுவை சிகிச்சைக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 
கோழிக்கோடு அரசு மருத்துவமனை

கேரளாவின் சிறுவனூரைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், தனது 4 வயது மகள் கையில் ஆறாவது விரல் வளர்வதை அறிந்து அதை அகற்ற முடிவு செய்தார். இதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினர். அறுவை சிகிச்சை மூலம் 6வது விரலை அகற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமியின் ஆறாவது விரலை அகற்ற அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவர்

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறுமியைப் பார்க்க பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்று பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ஆறாவது விரல் அகற்றப்படாமல் சிறுமியின் கையில் அப்படியே இருந்தது.

பதட்டமடைந்த பெற்றோர், விரலை அகற்றாமல் வேறு என்ன அறுவை சிகிச்சை செய்தார் என மருத்துவரிடம் கேள்வி எழுப்பினர். விரல் அகற்றும் அறுவை சிகிச்சை நடக்கவில்லை. சிறுமியின் நாக்கின் அடியில் இருந்த அதிகப்படியான சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பின்னர், அறுவை சிகிச்சை ஆவணங்களைச் சரிபார்த்ததில், அறுவை சிகிச்சை மாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர், சிறுமியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்.

பின்னர், விரல் அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தங்களின் அனுமதியின்றி நாக்கின் அடியில் உள்ள சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர் மீது சிறுமியின் பெற்றோர் கேரள மாநில சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுப்போன்று கோழிக்கோடு அரசு மருத்துவமனை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web