அதிர்ச்சி.. அமெரிக்க பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு போலி நகைகள் விற்பனை.. வடமாநில நபர்களுக்கு வலைவீச்சு!

 
செரிஷ்

செரிஷ் அமெரிக்காவை சேர்ந்தவர். அவர் 2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கௌரவ் சோனியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் நகைக் கடை வைத்திருப்பதாக கௌரவ் சோனி செரிஷிடம் கூறினார். இதையடுத்து செரிஷ் அவரிடம் தங்க நகைகளை வாங்க முயன்றார். இவரது ஆசையை அறிந்த சோனி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை ரூ.300க்கு வாங்கினார். இந்த நகைகளை செரிஷிடம் ரூ.6 கோடிக்கு விற்றார்.

அதாவது கடந்த இரண்டு வருடங்களில் வெறும் ரூ.300 மதிப்புள்ள நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஷ் வாங்கியுள்ளார். இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​அது போலியானது என தெரியவந்தது. ஏமாற்றமடைந்த செரிஷ் உடனடியாக ஜெய்ப்பூர் சென்று கௌரவ் சோனியுடன் சண்டையிட்டார். ஆனால், இதனை கௌரவ் சோனி மறுத்துள்ளார்.

இதையடுத்து, செரிஷ் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியை நாடினார். அவர்களின் ஆதரவுடன் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள கௌரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகியோரை தேடி வருவதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web