ஷாக் வீடியோ! கருப்பினத்தவரை கொடூரமாக கொலை செய்த அமெரிக்க காவல்துறை!

 
 பிராங்க் டைசன்

கடந்த 18ம் தேதி அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள கேண்டனில் கார் விபத்து ஏற்பட்டது. சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் கார் மோதியது. விபத்தை ஏற்படுத்திய நபர் காரை விட்டு இறங்கி அருகில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் சென்றார்.இதற்கிடையே விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்தியது யார் என விசாரித்துவிட்டு கேளிக்கை விடுதிக்குள் சென்றனர். அப்போது, விபத்தை ஏற்படுத்தியவர் பிராங்க் டைசன் (வயது 53) என்பது தெரியவந்தது.


இதையடுத்து ஃபிராங்க் டைசனை கைது செய்ய போலீசார் இரவு விடுதிக்குள் நுழைந்தனர். போஷியரின் ஆடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் கைதானது பதிவாகியுள்ளது. ஃபிராங்க் டைசன் இரவு விடுதிக்குள் போலீஸ் நுழைவதைப் பார்த்து, 'அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள், உயர் அதிகாரிகளை அழைக்கவும்' என்று கத்தினார்.  போலீசார் விரைந்து வந்து அவரை கீழே தள்ளி கைது செய்ய முயன்றனர். இதன் காரணமாக டைசன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், போலீஸ் அதிகாரி ஒருவர் டைசனை காலால் கழுத்தை நெரித்து கைது செய்ய முயன்றார்.

போலீஸ்காரர் கழுத்தை நெரித்ததால் டைசனால் மூச்சுவிட முடியவில்லை. டைசன், இதனால் என்னால் மூச்சு விட முடியவில்லை. உன் காலை என் கழுத்தில் இருந்து எடு, என்று கத்தினார். ஆனால் போலீஸ்காரர், "அமைதியாக இருங்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று கூறி, சில நிமிடங்கள்  கழுத்தில் கால் வைத்து இறுக்கினார். இதில் டைசன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரர் மூச்சு விடுகிறாரா? அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

ஆனால் டைசன் மயக்கத்தில் அசையாமல் கிடந்தார். உடனே போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டைசனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். கைது நடவடிக்கையின் போது கறுப்பினத்தவர் ஒருவர் போலீசரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இறந்த டைசன், கடத்தல் மற்றும் திருட்டு வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பின்னர் கடந்த நாள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மே 2020 இல் அமெரிக்காவின் மின்னியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது இறந்தார். கைது நடவடிக்கையின் போது 5 நிமிடங்களுக்கு மேலாக போலீசார் அவரை கழுத்தை நெரித்ததால் அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்புக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web