ஷாக் வீடியோ.. கட்டணத்தை செலுத்த சொன்னதால் ஆத்திரம்.. சுங்கச்சாவடியை இடித்து தள்ளிய ஓட்டுநர் கைது!

 
சாஜர்சி சுங்கச்சாவடி

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள சாஜர்சி சுங்கச்சாவடியில் புல்டோசர் ஒன்று செல்ல முயன்றது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் புல்டோசர் ஓட்டுநரிடம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடித்து தள்ளினார். அவரது பயங்க்ர செயலால் இரண்டு சுங்கச்சாவடிகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக வரப்பூர் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த டிரைவரை கைது செய்தனர். மேலும் டிரைவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த வாரம் இதே சுங்கச்சாவடியில் ஒரு கார் ஓட்டுநர் சுங்கக் கட்டணத்தை செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதினார் என்பதும் பிடத்தக்கது. இந்த சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் தொடர் சம்பவங்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web