ஷாக் வீடியோ.. கள்ள ஓட்ட போடுவதை லைவ் ஸ்ட்ரீம் செய்த பாஜக நிர்வாகி.. குஜராத்தில் பரபரப்பு!

 
விஜய் பாபர்

குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது. தஹோத் தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு விஜய் பாபர் என்ற இளைஞர் நேற்று மாலை வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்களிப்பதை இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்தார். அதில், வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்டி வாக்களித்ததாகவும், 2 போலி வாக்குகளை போட்டதாகவும் காட்டியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து மகிசாகர் எஸ்பி கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பாபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஹோத் காங்கிரஸ் வேட்பாளர் பிரபா தாவியத்,'' கைது செய்யப்பட்ட விஜய் பாபர் உள்ளூர் பாஜக தலைவரின் மகன்.

அவர் தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அவர் ஜனநாயக அமைப்பை அவமதித்துள்ளார். எனவே, ஓட்டுச்சாவடி எண் 220ல் மீண்டும் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார். பாஜக ஆளும் மண்ணான குஜராத்தில் பாஜகவினர் கள்ள ஓட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web