ஷாக் வீடியோ.. தாறுமாறாக சென்று 20 பயணிகளுடன் ஆற்றில் சொருகிய பேருந்து!

 
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆற்றின் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த பேருந்து எதிர்திசையில் வந்த கார் மீது மோதியது. பின்னர் அதிவேகத்தில் தடைகளை உடைத்து சிக்ஸரில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்குவதற்குள், சில பயணிகள் தண்ணீரில் மூழ்கி மயங்கிக் கிடந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் அவர்கள் சுயநினைவின்றி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்து விபத்தில் சிக்கியது எப்படி? கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது விஷமிகளின் வேலையா? என போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருவதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web